பழநி, ஆக.17: பழநி அருகே பாலசமுத்திரம் பகுதியில் அதிகரித்திருக்கும் டூவீலர்களில் வாலிபர்களின் அட்டகாசத்தை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. சுமார் 20 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். பழநியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இப்பேரூராட்சி உள்ளது. வேலைக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வோர் என ஏராளமானோர் நாள்தோறும் பழநிக்கு சென்று வருகின்றனர். இவர்களில் பலர் பஸ்களில் செல்
கின்றனர்.




