Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தொல்லியல் கருத்தரங்கம்

பழநி, ஆக.17: பழநி அருகே தாளையூத்து சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பண்பாடு, சுற்றுலா மற்றும் தொல்லியல் குறித்த ஒருநாள் மாநில அளவிலான பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரியின் முதன்மை நிர்வாக அலுவலர் சுவேதா சுப்பிரமணி தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் பழனிச்சாமி வரவேற்றுப் பேசினார். ஓய்வுபெற்ற பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் பழங்கால பொருட்களின் பெருமை, கட்டிடவியல் நுணுக்கம், பொருட்களின் தரம் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கருத்தரங்கில் பழநி, திண்டுக்கல், உடுமலை, கோவை பகுதிகளில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.