Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வித்விதா அகாடமி பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம்

ரெட்டியார்சத்திரம், ஆக.17: ராமபுரம் வித்விதா அகாடமி பள்ளியில் 80வது ஆண்டு சுதந்திர விழா நிகழ்ச்சிகள், பள்ளியின் தலைவர் எம்.சாமிநாதன் தலைமையிலும், பெற்றோர்கள் முன்னிலையிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவானது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலோடு தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக ஊர்க்காவல் படையின் துணை வட்டார தளபதியான, மகாத்மா மைண்ட் கேர் ஹாஸ்பிடல் டாக்டர் ஷர்மிளா பாலகுரு, கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து, சுதந்திர தின விழா கொண்டாடத்தின் முக்கியத்துவம் மற்றும் மனநல முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து மாணவ மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியில் தாளாளர் எஸ்.சித்தார்த்தன், செயலாளர் எஸ்.கவுதமன், பள்ளியின் அறங்காவலர்கள் இஇஆர்பி சுகன்யா மற்றும் ஆர்.ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்காக ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் நர்மதா, சக ஆசிரியை ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து செய்திருந்தனர்.