Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

5 கிலோ கஞ்சா பறிமுதல்

பழநி, ஜூலை 17: பழநி அருகே 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவரை போலீசார் கைது செய்தனர்.பழநி-கொடைக்கானல் சாலையில் மதுவிலக்கு போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள உணவகம் ஒன்றின் முன்பு, இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படி நின்றிருந்தவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்,ஒட்டன்சத்திரம் அருகே டி.புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிந்து, அவரிடமிருந்து 4.890 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நத்தம்:நத்தம் காவல்நிலைய எஸ்.ஐ மலைச்சாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நத்தம் செட்டியார் குளத்தெரு, கழிப்பறை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற, அப்பகுதியைச் சேர்ந்த செல்வ பிரகாஷ் (29) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.