திண்டுக்கல், ஆக.14: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள், மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை அனைத்து அரசு மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், ஹோட்டல்கள், கிளப்களில் இயங்கும் மதுக்கூடங்கள் அனைத்தும் மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் மதுக் கூடங்கள், உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள், மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும். மேலும், சுதந்திர தினத்தன்று விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



