Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வேடசந்தூர் அருகே காரில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 3 பேர் கைது

வடமதுரை ஆக. 13: வேடசந்தூர் அருகே காரில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா, ரூ.80 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக பெண் உள்பட 3 பேரை கைது செய்தனர். சேலத்தில் இருந்து வேடசந்தூர் வழியாக தேனி மாவட்டத்திற்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக திண்டுக்கல் எஸ்பி ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் வேடசந்தூர் டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன், இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, எஸ்ஐ பாலசுப்பிரமணி மற்றும் தனிப்படை போலீசார் கருக்காம்பட்டி நான்கு வழிச்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் இருந்த கஞ்சா மற்றும் ரூ.80 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து காரில் வந்த கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவினையை சேர்ந்த பென்னட் (52), தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ராஜதானியை சேர்ந்த காந்திமதி (40), ராஜதானி கீழமஞ்சநாயக்கம்பட்டியை சேர்ந்த சிவராஜ் (38) ஆகியோரை பேரை கைது செய்தனர். இதுகுறித்து எஸ்பி ஜெயக்குமார் கூறுகையில், ‘கடந்த ஒரே மாதத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 95 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 63 கிலோ கஞ்சா, 2 கார்கள், 12 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என்றார்.