திண்டுக்கல், ஆக. 12: திண்டுக்கல் மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 15 குளங்களுக்கு மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்த புள்ளிகள் வரவேற்கப்படுகிறது என கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
திண்டுக்கல் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள மாவூர் அணை, சிறுவன்குளம், நீலமலைக்கோட்டை, நரசிங்கபுரம் தாமரைக்குளம், ரெங்கசமுத்திரக்குளம், புல்வெட்டிக்குளம் மற்றும் அத்திக்குளம் ஆகிய 7 கண்மாய்கள் மற்றும் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை குளங்களான காட்டுப்பெரியகுளம், பனங்குடி கண்மாய், ஊமச்சிகுளம், முகமை ஊமைசேர்வார்குளம், பங்காருசமுத்திரம் குளம் மற்றும் பாறைச்சின்னக்குளம் ஆகிய 6 கண்மாய்கள் மற்றும் குறுகிய கால பாசன குளங்களான பாப்பாக்குளம், ஆயக்குடி மற்றும் சிறுநாயக்கன்குளம் ஆகிய 2 குளங்கள் என மொத்தம் 15 குளங்களுக்கும் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்த புள்ளிகள் திண்டுக்கல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒப்பந்த புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு www.tntenders.gov.in என்னும் இணையதள முகவரியில் காணலாம். ஏல அறிவிப்பில் மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் adfdglinl1@gmail.com என்ற இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு திண்டுக்கல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் என்ற முகவரியில், 0451 2900148, 9751664565, 9994687689 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.



