Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆடி அமாவாசையையொட்டி திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு: விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல், ஆக. 12: ஆடி அமாவாசையையொட்டி நேற்று திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அறிஞர் அண்ணா பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் நகரை சுற்றியுள்ள சின்னாளபட்டி, கலிக்கம்பட்டி, வெள்ளோடு, அனுமந்தராயன் கோட்டை, அதிகாரிபட்டி, கோபால்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் தினந்தோறும் விளைவிக்கப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனைக்காக பேருந்து, சரக்கு வேன், இருசக்கர வாகனம் ஆகியவற்றில் கொண்டு வருகின்றனர். இங்கிருந்து தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் பூக்களை விற்பனைக்காக வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

இன்று ஆடி அமாவாசை என்பதால் நேற்று திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்து விற்பனையானதுஉ குறிப்பாக மாலை கட்டும் பூக்களான சம்பங்கி, செண்டு மல்லி, ரோஜா பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து விற்பனையானது. நேற்று அதிகபட்சமாக மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனையானது. அதேபோல் (ஒரு கிலோ) சம்பங்கி ரூ.250க்கும், ரோஸ் ரூ.160க்கும், கோழி கொண்டை ரூ.100க்கும், செவ்வந்தி ரூ.150க்கும், முல்லை பூ ரூ.300க்கும், ஜாதி பூ ரூ.350க்கும், கனகாம்பரம் ரூ.300க்கும், அரளி ரூ.400க்கும், வாடாமல்லி ரூ.30க்கும், செண்டு மல்லி ரூ.60க்கும், விருட்சி பூ ரூ.160க்கும், மருகு ரூ.80க்கும், மரிக்கொழுந்து ரூ.70க்கும், பட்டன் ரோஸ் ரூ.250க்கும், நந்திவட்டான், ரூ.300க்கும், தாமரை பூ ஒன்று ரூ.20க்கும் விற்பனையானது. பூக்களின் விலை திடீர் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.