பழநி, டிச.10: பழநி நகர் பகுதியில் செப்டிக் டேங்க் அகற்றும் வாகனங்களுக்கு லைசன்ஸ் பெற வேண்டுமென நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பழநி நகராட்சி அதிகாரிகள் கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலக்கசடு மற்றும் கழிவு மேலாண்மை கொள்கையின்படி உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை மேம்படுத்த விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளன.
இதன்படி கழிவுநீர் அகற்றும் லாரிகள் மற்றும் டிரெய்லர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த கடந்த 2022ம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி வாகன உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நகராட்சி மூலம் 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமம் பெய விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும்.


