திண்டுக்கல், டிச.10: திண்டுக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி கட்டட கட்டுமானதொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாலன் தலைமை வகித்தார். தலைவர் கண்ணன், துணைச் செயலாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தனர். கௌரவத் தலைவர் சந்திரமோகன், சிபிஐ மாவட்ட செயலாளர் மணிகண்டன், நாச்சிமுத்து வாழ்த்துரை வழங்கினர்.
இதில், ஒய்வூதியம் ரூ.6 ஆயிரம் என்பதை சட்டமாக்க வேண்டும். உடனடியாக வாரிய முடிவு படி ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். விண்ணப்பித்த அனைவருக்கும் வீடு கட்டும் மானிய தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். வெளிமாநில தொழிலாளர் வருகைக்கு வரம்பு விதித்திட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


