நத்தம், ஆக.10: நத்தம் பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் நேற்று ஒன்றிய அரசைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் பிரசாரம் நடந்தது. கூட்டத்திற்கு தாலுகா செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார். இதில் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்டத் துணைத் தலைவர் வினோத் குமார் உள்ளிட்ட பலரும் பேசினர். கூட்டத்தில், உலக செல்வங்களை அபகரிக்க அமெரிக்கா ஒவ்வொரு நாட்டுடனும் போரை நடத்துகிறது.
இந்தியாவில் மதச்சார்பின்மை, சமூக நீதி, வேற்றுமையில் ஒற்றுமை, இந்திய அரசியலமைப்பு சட்டம் போன்றவற்ற ஒன்றிய பாஜக அரசும், ஆர்எஸ்எஸ்.ம் அழிக்க துடிக்கின்றன. இளைஞர்களின் எதிர்காலத்தை நீட் தேர்வு போன்ற நடைமுறையை புகுத்தி பாழ்படுத்துகிறது என பேசினர். இதில் கட்சி நிர்வாகிகள் தவனூதன், அரவிந்தன், பொன்னுச்சாமி, வெள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




