பழநி, ஆக.10: பழநியில் ஒய்வூதியர்களுக்கான உடல்நல ஆலோசனை முகாமில், உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் செய்வதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பழநியில் ஒய்வூதியர்களுக்கு உடல்நல ஆலோசனை முகாம் நடந்தது. சித்த மருத்துவர் கல்பனா புலிப்பாணி, வயோதிக காலத்தில் உடலில் ஏற்படும் நோய்கள், அதனை தடுக்கும் வழிமுறைகள், சிகிச்சை முறைகள், இயற்கை உணவுகள், சத்துணவுகள், உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் செய்வதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார். இதில் 150க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்
+
Advertisement



