Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வாகனங்கள் மின்பாதையை கடக்கும் போது கவனம் தேவை

நிலக்கோட்டை, ஜூலை 10: மின் விபத்துக்களை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்வாரிய அதிகாரிகள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: பொதுமக்கள் எந்த காரணத்திற்காகவும் மின்வேலிகளை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஈரக்கையுடன் சுவிட்சுகள், பிளக்குகள் உள்ளிட்ட மின் சாதனங்களை தொடுவதை தவிர்க்க வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற தரமான வயர்களையும், மின் சாதனங்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆடு, மாடு போன்ற விலங்குகளை மின் கம்பத்திலோ, மின் இழுவைக் கம்பிகளிலோ கட்டுவதை தவிர்க்க வேண்டும். இணைப்பு கொடுத்துள்ள மின் வயர்களில் துணிகளை உலர்த்தக்கூடாது.