Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வேன் கவிழ்ந்து சிறுவன் பலி

குஜிலியம்பாறை, ஜூலை 10: குஜிலியம்பாறை அருகே ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(37). இவர் கடந்த 7ம் தேதி தனது சொந்த ஊரான ஈசநத்தம், கோயில் திருவிழாவிற்கு இவரது தந்தை தண்டபாணி(60), மகன் கதிரோவியன்(5) ஆகியோருடன் ஆம்னி வேனில் சென்றுள்ளார். ஆம்னி வேனை தண்டபாணி ஓட்டிச் சென்றார். ஈசநத்தம்-கரூர் சாலையில் நொச்சிபட்டி மேடு அருகே சென்ற போது, ஆம்னி வேன் கட்டுபாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.