Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

லாரி மீது டூவீலர் மோதி சிற்ப கலைஞர் உள்பட 2 பேர் பரிதாபச் சாவு

நத்தம், ஜூலை 9: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து திருப்பூருக்கு விறகு ஏற்றி கொண்டு நேற்று முன்தினம் இரவு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை கண்ணாயிருப்பை சேர்ந்த முத்துக்குமார் ஓட்டி சென்றார். இவருடன் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வேலாயுதம்பட்டியை சேர்ந்த பொன்னுக்காளை (55) வந்துள்ளார். நத்தம் அருகே சமுத்திராபட்டி பகுதியில் வந்த போது லாரியின் பின்பக்க டயர் பஞ்சர் ஆகி விட்டது. உடனே முத்துக்குமார் லாரியை ஓரமாக நிறுத்தி பொன்னுக்காளையுடன் சேர்ந்து பின்பக்க டயரை கழற்றி கொண்டிருந்தனர். அப்போது நத்தம் மூங்கில்பட்டியை சேர்ந்த சிற்ப கலைஞர் சித்திரைவேல் (28) டூவீலரில் வந்து கொண்டிருந்தார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சாலையோரம் நின்ற லாரி மீதும், லாரியில் டயர் பஞ்சர் பார்த்து கொண்டிருந்த பொன்னுக்காளை மீதும் மோதியது. இதில் சித்திரைவேல் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.