Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆத்தூர் தாலுகா அலுவலகத்தின் இ- சேவை மையத்தில் கலெக்டர் ஆய்வு

திண்டுக்கல், ஆக. 8: ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள அரசு இ- சேவை மையத்தில் கலெக்டர் துர்கா மூர்த்தி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: பொதுமக்கள் தங்களின் அங்கீகாரத்திற்கான அரசின் பல்வேறு வகையான சான்றிதழ்களை பெறுவதற்கு மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிகளை சார்ந்த தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பித்து வருகின்றனர்.

அவ்வாறு பொதுமக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் அவர்கள் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு எந்தவொரு தகுதியான பயனாளிகளும் விடுபடாமல் அரசின் திட்டங்கள் மற்றும் பயன்களை கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது ஆத்தூர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் விண்ணப்பித்த மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் நிராகரிக்கப்பட்ட மனுக்கள் மீதான காரணங்கள், அவை தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தகுதியுடையவர்களுக்கு எவ்வித காலதாமதமின்றி உரிய பயன்களை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.