வேடசந்தூர், ஆக. 8: வேடசந்தூர் அருகே ஜி.நடுப்பட்டியில் நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலியானதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வேடசந்தூர் அருகேயுள்ள ஜி.நடுப்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (60). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் தனது தோட்டத்தில் செட் அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை 7 மணியளவில் செட்டுக்குள் நுழைந்த 2 தெருநாய்கள் கடித்து குதறியதில் 7 ஆடுகள் உயிரிழந்தது. மேலும் சில ஆடுகள் காயமடைந்தன. இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஆடு வளர்ப்பவர்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement



