Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஒருதலை காதல் தோல்வியால் ஒட்டன்சத்திரம் மாணவர் கோவையில் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

கோவை, ஆக. 8: ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சி, வடக்கு வீதியை சேர்ந்தவர் சரவணகுமார். இவர், திண்டுக்கல்லில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காவல் துறையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் பிரணவ் பத்மாதேவ் (18). இவர், கோவை குனியமுத்தூர் அருகேயுள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 2ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக கல்லூரி அருகேயுள்ள இ.பி. காலனி, புதிய நகரில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பிரணவ் பத்மாதேவ் தான் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், உடனடியாக அவரது தந்தை சரவணகுமாருக்கும், குனியமுத்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் கோவை விரைந்து வந்த சரவணகுமார், மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். தொடர்ந்து போலீசார் பிரணவ் பத்மாதேவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், பிரணவ் பத்மாதேவ் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிகிறது.