நிலக்கோட்டை, டிச.7: எ.வெள்ளோடு அருகே கரட்டழகன்பட்டி பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்த்தொற்று ஏற்படும் நிலை உள்ளது. எனவே தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எ.வெள்ளோடு ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டழகன்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள காளியம்மன், பகவதியம்மன், மாரியம்மன் கோவில் முன்பாக உள்ள சிறுநாயக்கன்பட்டியில் இருந்து கரட்டழகன்பட்டி வழியாக திண்டுக்கல் செல்லும் மெயின் ரோடு ஓரத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்த்தொற்று ஏற்படும் நிலை உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அப்பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


