வடமதுரை, டிச.7: வடமதுரையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
வடமதுரையில் நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர் வசந்தன் மற்றும் ராமசாமி ஆகியோர் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில் வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் காளிதாஸ் என்பவரின் டீக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒரு கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.


