Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

காவல் உதவி மையம் பயன்பாட்டிற்கு வருமா?

வேடசந்தூர், மே 7: வடமதுரை மற்றும் அய்யலூரை சுற்றி ஏராளமான மலைக் கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் அய்யலூர் வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் பரபரப்பாக அய்யலூர் பகுதி காணப்படுகிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால் தற்போது அவர்கள் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இங்கு காவல் உதவி மையம் அமைக்க இரும்பு பெட்டி வைக்கப்பட்டது. தற்போது அது பயனின்றி உள்ளதால் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பெண்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பயன்பாடின்றி காணப்படுவதால் விஷ ஜந்துக்கள் உள்ளே புகுந்து விடுகின்றன. எனவே இந்த காவல் உதவி மையத்தை புறக்காவல் நிலையம் ஆக மாற்றி போலீசாரை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.