ஒட்டன்சத்திரம், ஆக.5: வேடசந்தூர் பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி (65). இவர் தனது மகன் குமரேசன் (26) உடன், டூவீலரில் பழநியில் இருந்து பாப்பநாயக்கன் பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வெரியப்பூர் பிரிவு அருகே, எதிரே வந்த கார், இவர்களது டூவீலர் மீது மோதியது. இதில் ஆண்டிச்சாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குமரேசன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டர். இந்த விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
+


