Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போலீசாரை மிரட்டிய 6 பேர் அதிரடி கைது

திண்டுக்கல், மார்ச் 3: திண்டுக்கல் அருகே போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில், எஸ்ஐ கிருஷ்ணகுமார், எஸ்எஸ்ஐ அரியவேல் தலைமையிலான போலீசார் திண்டுக்கல் - எம்.எம்.கோவிலூர் ரோடு குழந்தைபட்டி பிரிவு அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக காரில் சீலப்பாடி குழிப்பட்டியைச் சேர்ந்த வினோத்குமார் (26), காப்பிலியப்பட்டி பகவதி (30), பண்ணப்பட்டி கவியரசு (26), திண்டுக்கல் ஜெயக்குமார் (28), தர்மராஜ் (26), பெரியகோட்டை முத்துக்குமார் (31) ஆகியோர் இருந்தனர். அந்த காரில் இருந்த ஆயுதங்கள் குறித்து விசாரித்தபோது வாள், கத்தியை எடுத்து போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமார் உட்பட 6 பேரையும் கைது செய்தனர்.