Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் பகுதியில் தென்னை, பாக்கு மரங்களை சேதப்படுத்திய காட்டுயானை

நிலக்கோட்டை, அக். 2: ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் பகுதியில் இரவில் நடமாடும் ஒற்றை யானை, தென்னை மற்றும் பாக்கு மரங்களைச் சேதப்படுத்தியதால் விவசாயிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் நீர்த்தேக்கம், கன்னிமார் கோவில், குதிரைக்குளிப்பாட்டி, சடையாண்டி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் யானை நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

கடந்த மாதம் 9ம் தேதி இரவு சித்தையன்கோட்டை, நரசிங்கபுரம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் தோட்டப் பகுதியில் நடமாடிய யானையை, விவசாயிகள் டார்ச் லைட் அடித்து விரட்டியுள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் அடிக்கடி இரவு நேரங்களில் வந்து செல்லும் இந்த ஒற்றை யானை, விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது.