Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பழநி கோயிலில் நவராத்திரி விழா; அக்.11ம் தேதி துவக்கம்

பழநி, அக். 2: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று நவராத்திரி. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழா வரும் வரும் 11ம் தேதி மலைக்கோயிலில் உச்சிகாலத்தில் காப்புகட்டுதலுடன் துவங்க உள்ளது. விழா நடைபெறும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோயிலில் பக்திச் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரத நாட்டியம், கிராமிய நடனம், பட்டிமன்றம், கருத்தரங்கம், திருமுறை இன்னிசை, போன்ற கலை நிகழ்ச்சிகள்அன்று பகல் 1.30 மணிக்கே மலைக்கோயிலில் சாயரட்சை பூஜை நடைபெறும். பகல் 2.45 மணிக்கு பராசக்தி வேல் மலைக்கோயிலில் இருந்து புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோயிலை வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறும்.

இதன்பின் கோயில் நடை அடைக்கப்படும். தொடர்ந்து தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி கோதைமங்கலம் சென்று அம்பு போட்டு வன்னிகா சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதனைத்தொடர்ந்து பராசக்திவேல் மீண்டும் மலைக்கோயில் செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.