ஒட்டன்சத்திரம், அக். 2: அம்பிளிக்கை அருகேயுள்ள தங்கச்சியம்மாபட்டியில் உள்ள பேக்கரியில் பணிபுரியும் பாலாஜி (24) என்பவரை, முன்பகை காரணமாக நேற்று முன் தினம் பட்டாக்கத்தியுடன் வந்த 19 வயதுடைய இருவர், 18 வயதுடைய ஒருவர் என மூன்று பேர் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. காயமடைந்த பாலாஜி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் அம்பிளிக்கை காவல் நிலைய போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்திய 2 டூவீலர்கள் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
+
Advertisement


