Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

100 நாள் வேலை திட்ட பெயரை மாற்றிய ஒன்றிய அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் மறியல்

திண்டுக்கல், ஜூலை 2: ஒன்றிய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை (100 நாள் வேலை) வி.பி.ஜி- ராம்ஜி என்ற பெயரில் மாற்றி நேற்று நாடு முழுவதும் அமல்படுத்தியது. இதில் காந்தியின் பெயரை நீக்கியதுடன், 100 நாள் வேலை திட்டத்தையே ஒழிக்க திட்டமிடும் ஒன்றிய அரசை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டங்கள், வி.பி.ஜி- ராம்ஜி சட்ட நகலை தீயிட்டு எரிக்கும் நிகழ்வுகள் நடந்தன. இதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தின் பல இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் சார்பில் சாலை மறியல் போராட்டங்கள், விபி- ஜி ராம்ஜி சட்ட நகலை தீயிட்டு எரிக்கும் நிகழ்வுகள் நடந்தன.

*திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர். இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்ற கூடாது. கருவிழி பதிவு மற்றும் கைரேகை பதிவு என்கிற பெயரால் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பை பறிக்க கூடாது. 100 நாள் வேலை திட்டத்திற்கான ஒன்றிய அரசின் நிதியை குறைத்து மாநில அரசின் நிதியை ஏற்ற கூடாது. அடையாள அட்டை வைத்துள்ள