Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கட்டிலை சரிசெய்ய சொன்னவருக்கு கத்திக்குத்து

நத்தம், ஜூலை 2: நத்தம் அருகே புன்னப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (41). இவர் அதே பகுதியை சேர்ந்த மருதுபாண்டி (30) என்பவரிடம் சென்று தனது மரக்கட்டிலை சரிசெய்து தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு மருதுபாண்டி உனக்கெல்லாம் சரிசெய்ய முடியாது என்று கூறியும், சாதியை சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மருதுபாண்டி தனது நண்பர்கள் சிவக்குமார் (45), லட்சுமணன் (25) ஆகியோருடன் சென்று கத்தியால் சுரேஷை குத்தி விட்டு உன்னை கொன்று விடுவோம் என மிரட்டல் விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சுரேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் ஜிஹெச்சில் சேர்த்தனர். இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்து மருதுபாண்டி, லட்சுமணனை தேடி வருகின்றனர்.