Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழநியில் சூறவாளி காற்றுக்கு மரம் விழுந்து:  2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

பழநி, ஜூலை 1: பழநி நகரில் நேற்று பிற்பகல் வரை கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதன்பின்பு, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்தது. இந்நிலையில் சாரல் மழையுடன் சூறாவளி காற்று வீசியது. இதில் பல கிராமங்களில் மின்சாரம் தடைபட்டது. வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பழநி- உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன்பட்டி பிரிவு அருகே புங்கை மரம் வேருடன் சாய்ந்தது. இதனால் இச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நான்கு வழிச்சாலை வழியாக கோதைமங்கலம் வழித்தடத்தில் மாற்றி விடப்பட்டது.

தகவலறிந்ததும் பழநி தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புங்கை மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். அதன்பின் போக்குவரத்து சீரடைந்தது. இச்சாலையில் மரம் விழுந்ததால் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.