பாப்பிரெட்டிப்பட்டி, ஜன.30:பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டவர்த்தியைச் சேர்ந்தவர் பீமன் மனைவி சென்னம்மாள்(40). இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் குமார் (58) என்பவருக்கும், நீண்ட நாட்களாக இடம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. கடந்த 27ம் தேதி, வருவாய் துறையினர் இடத்தை அளந்து கல் நட்டு சென்றனர். அந்த கல்லை குமார் பிடுங்கி எறிந்தார். இதை தட்டிக்கேட்ட சென்னம்மாளை, கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், குமாரின் மனைவி சாமந்தி(53), மருமகள் சந்தியா(27) ஆகியோர் தகாத வார்த்தையால் திட்டினர். இதுகுறித்து சென்னம்மாள் அளித்த புகாரின் பேரில், ஏ.பள்ளிப்பட்டி போலீசார் குமார், சாமந்தி, சந்தியா ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சாமந்தி, சந்தியாவை தேடி வருகின்றனர்.
+



