Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கிராம அளவிலான வேளாண் பயிற்சி

தர்மபுரி ஆக.29: தர்மபுரி மாவட்ட வேளாண்மைத் துறையின் உழவர் பயிற்சி நிலையம் சார்பில், கிராம அளவிலான விவசாயிகள் பயிற்சி, மொரப்பூர் வட்டாரம் கூடுதுறைப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. பயிற்சியில் வேளாண்மை அலுவலர் பாரதி, பயிர் காப்பீட்டின் முக்கியத்துவம், இயற்கை வேளாண்மையின் அவசியம், நன்மைகள், இயற்கை இடுபொருட்களின் பயன்பாடு மற்றும் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து இயற்கை உரங்கள் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். மொரப்பூர் வட்டார உதவி வேளாண்மை அலுவலர் வசந்த் மற்றும் சிவராசு ஆகியோர், வேளாண்மைத் துறை திட்டங்கள், மானியங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

தொடர்ந்து, வேளாண் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் கணபதி மற்றும் கால்நடைத்துறை மருத்துவர் தங்களது துறைகளின் பல்வேறு அரசுத் திட்டங்கள், மானியங்கள் குறித்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். மேலும், விவசாயிகள் தங்களுக்கான தனித்துவமான உழவர் அடையாள எண் பெற்று உழவர் பதிவேட்டில் பதிவு செய்யும்படி அறிவுறுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.