தர்மபுரி, ஆக.29: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் எஸ்ஐ நாகராஜ் மற்றும் ேபாலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருமத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறத்தில், சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு விரைந்தனர்.
போலீசை கண்டதும் சூதாடியவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த ராதாரவி(58), சீனிவாசன்(50) ஆகியோர் சிக்கினர். அவர்களிடமிருந்து ரூ.1,500 பணம் மற்றும் 4 டூவீலர்கள் பறிமுதல் கைப்பற்றப்பட்டது. மேலும், தப்பி ஓடியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



