Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம்

தர்மபுரி, ஜன.29: தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 86 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், மக்கள் குறைதீர்க்கும் முகாம்(பெட்டிஷன் மேளா) மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. 32 காவல்நிலையம் சார்பில் தனித்தனியாக புகார் மனுதாரர்களை நேரில் வரவழைத்து, குறைகள் கேட்டு மனுக்கள் மீது விசாரிக்கப்பட்டது. எஸ்.பி., மகேஸ்வரன் உத்தரவின்பேரில், ஏடிஎஸ்பிக்கள் பாலசுப்பிரமணியம், ஸ்ரீதரன் ஆகியோர் தலைமையில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றுக்கொண்டு போலீசார் விசாரித்தனர். இம்முகாமில், 86 மனுக்கள் பெறப்பட்டு, உடனே விசாரித்து தீர்வு காணப்பட்டது. நிலப்பிரச்னை, வழித்தட பிரச்னை, பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்னை, குடும்ப பிரச்னை, போலி ஆவணம் தயாரித்தல், மிரட்டல் உள்ளிட்ட பலவகையான மனுக்கள் மீது விசாரிக்கப்பட்டது. மேலும், இந்த முகாமில் புதியதாக 35 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடந்து வருவதாக ேபாலீசார் தெரிவித்தனர்.