Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெட்ரோல் பங்க் முன் நிறுத்திய 2 பைக் திருட்டு

தர்மபுரி, ஆக.28: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன் (22). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது டூவீலரை, பாலக்கோடு அருகேயுள்ள பெட்ரோல் பங்க் அருகில் 25ம் தேதி காலை, நிறுத்தி விட்டு சொந்த வேலையாக வெளியே சென்றார். மாலை வந்து திரும்பி பார்க்கையில், டூவீலர் திருடு போயிருந்தது.

இதே போல், காரிமங்கலம் ஏரிகீழுர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (37) என்பவர், கடந்த 25ம் தேதி, காரிமங்கலம் இபி அலுவலகம் அருகில் டூவீலரை நிறுத்தி விட்டு அருகில் உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது, டூவீலர் திருடு போயிருந்தது. இதுபற்றி இருவரும் கொடுத்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.