காரிமங்கலம், ஆக.28: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த எலுமிச்சன அள்ளிஊராட்சி, முதலிப்பட்டியை சேர்ந்தவர் வடிவேல் (45). அரசு பஸ் டிரைவர். நேற்று மதியம், வடிவேல் தனது பைக்கில் காரிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். செல்லமாரம்பட்டி பிரிவு ரோடு அருகே சென்றபோது, அவ்வழியே வந்த பிக்கப் வேன் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த வடிவேல், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement




