Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

புதுப்பெண், மாணவி உள்பட 4 பெண்கள் திடீர் மாயம்

தர்மபுரி, ஆக.26: தர்மபுரி மாவட்டத்தில் திருமணமான புதுப்பெண், நர்சிங் கல்லூரி மாணவி உள்பட 4 பெண்கள் திடீரென மாயமானது குறித்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், தொப்பூரைச் சேர்ந்த ஜம்பேரி மகள் தேன்மொழி(19). இவர் தனியார் நர்சிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 23ம் தேதி, வீட்டிலிருந்து வெளியே ெசன்றவர் பின்னர் திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அரூர் கீரைப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த ரமேஷ் மகள் ரஞ்சிதா(17).

12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 21ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.இதே போல், பென்னாகரம் அருகே நாகனூரைச் சேர்ந்த சுப்ரமணி மகள் பிரமிளா(17). இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 21ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர், பின்னர் திரும்பவில்லை. பென்னாகரம் தாசம்பட்டியைச் சேர்ந்த சதாசிவம் மனைவி ரோஷி(21). திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலையில், கடந்த 23ம் தேதி வெளியே சென்ற ரோஷி, பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில், பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து

வருகின்றனர்.