நல்லம்பள்ளி, ஜன.22: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஜருகு பகுதியைச் சேர்ந்த ஒரே சமூகத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர், தொப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனுவை நேற்று வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி ஜருகு பகுதியைச் சேர்ந்த ஒருவர், ஒரு சமூகத்தை பற்றி தவறாக பேசும் ஆடியோ ஒன்றை தயார் செய்து, கடந்த சில வாரங்களுக்கு முன், சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும், இருசமூக மக்கள் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பரப்பியுள்ளார். அவர் சார்ந்த கட்சியில் பதவி பெற, ஒரு சமூகத்தை பற்றி தவறுதலாக ஆடியோவை பரப்பியுள்ள மானியதஅள்ளி ஊராட்சியை சேர்ந்த அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. நல்லம்பள்ளியில் இரு சமூகத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில், ஆடியோ பரப்பிய பிரமுகர் மீது 200க்கும் மேற்பட்டோர், தொப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
+
Advertisement

