தர்மபுரி, ஆக.21:பொம்மிடி அடுத்த பையர்நத்தம் ரோட்டில், கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ மற்றும் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த முனேஸ்(24) என்பவர், பிக்அப் வேனில் ஓடை கற்களை கடத்தி வந்துள்ளார். அவற்றை பறிமுதல் செய்த விஏஓ இளங்கோ, பொம்மிடி போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் லோடுடன் வேனை பறிமுதல் செய்து, வாலிபர் முனேஸை கைது செய்தனர்.
+
Advertisement



