தர்மபுரி, ஆக.21:காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் பாவனா (16). இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 18ம் தேதி, வீட்டை விட்டு வெளியே சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர் காரிமங்கலம் போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல், பொம்மிடி அருகே பி.துரிஞ்சிப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் மகள் மதுமதி (14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன், வீட்டை விட்டு வெளியே சென்ற மதுமதி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காததால், பெற்றோர் பொம்மிடி போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.




