Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.12 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

காரிமங்கலம், ஜன.20: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய் கிழமை தோறும் கூடுகிறது. அதற்கு முன்னதாக திங்கட்கிழமை காலை முதல் தேங்காய் சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில் காரிமங்கலம், காவேரிப்பட்டணம், பாரூர், அரசம்பட்டி, நாகரசம்பட்டி, தட்ரஅள்ளி, செல்லம்பட்டி, குடிமேனஅள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். சுமார் 1 லட்சம் அளவிலான தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தேங்காய் அளவை பொறுத்து ரூ.14 முதல் ரூ.24 வரை விற்கப்பட்டது. நேற்று நடந்த சந்தையில், ரூ.12 லட்சம் அளவில் தேங்காய் விற்பனை நடந்தது. கடந்த வாரத்தை காட்டிலும், தேங்காய் வரத்து குறைந்த நிலையில், விலை கடந்த வாரத்தை போலவே இருந்தது. வரும் வாரத்தில் திருமண முகூர்த்த நாட்கள் வர உள்ளதால், தேங்காய் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.