Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அரசு பள்ளியில் விளையாட்டு, கலைநிகழ்ச்சி

பென்னாகரம், ஆக.19: பென்னாகரம் ஒன்றியம், சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கு தலைமையாசிரியர் பழனி தலைமை தாங்கினார். கல்வி -40 என்ற அமைப்பின் மூலம் கருத்தாளர் சந்திரா கலந்து கொண்டு மாணவர்களுக்கு கதை, ஓவியம், பாடல், நாடகம், பொம்மலாட்டம், நடிப்பு, காகித மடிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கினார்.

கலைகள் மூலமாக, மாணவர்களின் கற்பனைத் திறன் மேம்படுதல், தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளுதல், பன்முகத்தன்மையோடு செயல்படுதல் உள்ளிட்ட திறமைகள் மாணவர்களிடையே வளர்த்துக் கொள்ள இப்பயிற்சி உதவும் என்றார். பயிற்சியில், மாணவர்கள் 40 பேர், உற்சாகத்தோடு பங்குபெற்று பயனடைந்தார்கள். நிகழ்ச்சியை வசந்த் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, கல்பனா, கலைச்செல்வி, ராஜேஸ்வரி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.