தர்மபுரி, ஆக.19: தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை நரசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் மகள் ரீனா(16). தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம், வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை, இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், கடத்தூர் வேடியூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னையன் மகள் கீர்த்தனா(28). எம்பிபிஎஸ் முடித்த இவர் செட்டிக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



