Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெண்ணிடம் பண மோசடி; ஆசிரியர் மீது சஸ்பெண்ட்: நடவடிக்கை பாய்கிறது?

தர்மபுரி, ஆக.14: தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவரது மனைவி சாந்தி (42). இவர் சொந்தமாக ஓட்டல் வைத்துள்ளார். இந்த ஓட்டலுக்கு கிருஷ்ணாபுரம் வன்னியகுலம் பகுதியை சேர்ந்த முனியப்பன் (36) என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இவர் பாப்பாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அடிக்கடி ஓட்டலுக்கு வந்து சென்றதால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் முனியப்பனிடம், சாந்தி 10 லட்சம் ரூபாய் சீட்டு போட்டு வந்துள்ளார். இதற்காக மாத தவணையாக ரூ.33 ஆயிரம் என, 17 மாதம் பணம் செலுத்திய நிலையில் சீட்டை எடுத்துள்ளார். குறிப்பிட்ட தொகையை வழங்கிய முனியப்பன் ரூ.5 லட்சம் பணம் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதுகுறித்து சாந்தி மொரப்பூர் போலீசில் புகாரளித்தார். அதன் பேரில், போலீசார் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதில், அவர் ஏற்கனவே இதுபோல சீட்டு நடத்தி, மோசடி செய்த விவகாரம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, மீண்டும் அவர் மீது புகார் கிளம்பியுள்ளதால், துறை ரீதியான சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும் என கல்வித்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.