தர்மபுரி, ஆக. 14: தர்மபுரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் டி.ஆர்.அன்பழகன், கிழக்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் அசோகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில், விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாது அணை தொடர்பாக மெத்தனம் காட்டி வருவது மற்றும் காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு பெற வேண்டிய பங்கு நீரை உரிய முறையில் பெற்று தராத தவெக அரசை கண்டித்தும், இன்று (14ம் தேதி) காலை 10 மணிக்கு, பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் அமைப்பு செயலாளர்கள் ராயபுரம் மனோ, திருவேற்காடு சீனிவாசன் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




