அரூர், ஆக. 14: தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே தாதனூர் கிராமத்தை சேர்ந்தவர் முல்லைஅரசு மகன் மோனிஷ்குமார் (19). இவர் தர்மபுரி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து டூவீலரில், மோட்டூர் பஸ் ஸ்டாப்பிற்கு சென்றுள்ளார்.
அங்கு புளியமரத்துக்கு அடியில் டூவீலரை நிறுத்தி விட்டு கல்லூரி சென்று விட்டு, மாலை திரும்பி வந்து பார்த்தார். அப்போது அங்கு டூவீலரை காணவில்லை. இந்த சம்பவம் குறித்து மோனிஷ்குமார், மொரப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.



