அரூர், நவ. 13: மொரப்பூர் அருகே செட்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கைலாசம் மகள் சுகன்யா (25). இவர் தனது படிப்பை முடித்து விட்டு, கடந்த 4 ஆண்டுகளாக கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். வேலையை விட்டு விட்டு, கடந்த ஒரு மாதமாக வீட்டில் இருந்த அவர், கடந்த 10ம் தேதி இரவு முதல் காணவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து தனது மகளை கண்டு பிடித்து தரும்படி, கைலாசம் மொரப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
+
Advertisement
