தர்மபுரி, நவ. 13: தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்துள்ளது. இதேபோல், வடகிழக்கு பருவமழையும் பரவலாக பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த 2 தினங்களாக வானம் வறண்டு காணப்பட்டது. கடும் குளிர்காற்று வீசியது. மேலும், பனிமூட்டம் காரணமாக, சாலையில் 30 அடி தொலைவில் உள்ள வாகனங்கள் கூட தெரியாததால், தர்மபுரி வழியாக சென்ற வாகனங்கள் அனைத்தும், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. நடப்பாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நவம்பர் மாதத்திலேயே கடும் குளிர் வீசுவதால், அதிகாலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
+
Advertisement
