தர்மபுரி, ஆக.13: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. தண்ணீர் இல்லாமல் நீர்நிலைகள் வறண்டு விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று வெயில் 97.1 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியிருந்தது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு தர்மபுரியில் திடீரென மழை பெய்தது.
இந்த மழை சுமார் ஒரு மணிநேரம் பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தர்மபுரியில் பெய்த மழையின் அளவு விபரம்: பாப்பிரெட்டிப்பட்டி - 11 மில்லி மீட்டர், அரூர் -8 மில்லி மீட்டர், நல்லம்பள்ளி 3.5 மில்லி மீட்டர் என மொத்தம் 22.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.



