Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆடி அமாவாசையை முன்னிட்டு பெரியகருப்பசாமி கோயில் பூசாரிக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம்

தர்மபுரி, ஆக.13: ஆடி அமாவாசையை முன்னிட்டு, பெரிய கருப்பசாமி கோயிலில், பூசாரி மீது 108 கிலோ மிளகாய் கரைசலை ஊற்றி அபிஷேகம் நடந்தது. தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே நடப்பனஅள்ளி கிராமத்தில் உள்ள பெரிய கருப்பசாமி கோயிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து, பகல் 12 மணியளவில், குடும்ப தீவினைகள் அகல மிளகாய் இடுதல், மிளகாய் அரைத்தல் நடைபெற்றது. அரிவாள் மீது நின்றபடி கோயில் பூசாரி, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பகல் 2 மணியளவில் பூசாரி மீது தண்ணீரில் கரைக்கப்பட்ட 108 கிலோ மிளகாய் தூளை ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 7 மணியளவில் கருப்பசாமிக்கு கும்ப பூஜை நடைபெற்றது. விழாவில், காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம்

வழங்கப்பட்டது.