Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வழித்தடத்தை அளக்க எதிர்ப்பு பெண் தீக்குளிக்க முயற்சி

காரிமங்கலம், ஆக.13: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த மன்னன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி, விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கம் மற்றும் வெங்கடாசலம் ஆகியோருக்கும், 21 அடி வழித்தடத்தை உரிமை கொண்டாடுவது தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது.

நிலம் பிரச்னை தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி வருவாய்த்துறை அதிகாரிகள் நிலத்தை அளக்க சென்றனர். அப்போது, சின்னதம்பியின் மனைவி சாந்தி(50) என்பவர், உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கிருந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், அவரை தடுத்து நிறுத்தி, அவரிடமிருந்து மண்ணெண்ணை கேனை பறித்தனர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி, நிலம் போலீஸ் பாதுகாப்புடன் அளவீடு செய்யப்பட்டது.